மக்கள் தொகையில் சிறிய அளவிலான ஒரு மக்கள் காலம் காலமாக வர்கள் ....அரசு வேலையில் அவர்களே இருக்கிறார்கள் எல்லா நிலையிலும் ....70 ஆண்டுகள் முன்னே இருந்த நிலை ....இதை எப்படி போக்குவது ....பெருவாரியான சமூகம் படிப்பறிவில்லாமல் இருந்த நிலையில் அந்த மக்களின் முன்னேற்றம் என்ன ! நன்றாக யோசித்தால் அந்த நன்றாக படித்த சமூகம் தான் மற்றவர்களை படிக்க தூண்டி இருக்க வேண்டும் ........ஆனால் அவர்களோ தான் நன்றாக இருந்தால் போதும் மற்ற சமூகம் எப்படி போனால் என்ன என்று இப்போது இருக்கும் அவர்களின் மனநிலையில் தான் அப்போதும் இருந்தார்கள் ....அவர்களுடைய ஒற்றை இலக்கு தன்னை சமூக அந்தஸ்து பெற வைத்த மனு தர்மத்துக்கு எந்த வித சேதாரமமும் வராமல் பார்த்துக்கொள்வது ........அதற்கு அந்த மனு தர்மத்தை வகுத்து கொடுத்த மதத்தை காப்பது ....மதம் காக்க வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமான கடவுளை பிற சமூகத்தினர் அண்ட விடாமல் பார்ப்பது ....இவ்வளவு முக்கிய வேலை அவர்களுக்கு இருக்கும் போது அவர்களுக்கு மற்ற சமூகத்தின் மேம்பாட்டுக்கு யோசிக்க அவர்களுக்கு எப்படி மனம் வரும் ....இந்த அவர்களின் சமூக அந்தஸ்தை காப்பாற்றிக்கொள்ளவே அவர்கள் மேலெடுத்த குலக்கல்வி ....இப்படி ஒரு நிலையில் தான் அவதரித்தார் Periyaar ....இவர்களின் சுயரூபத்தை தெரு தெருவாக சென்று தோலுரித்தார் ...அவர் திராவிட சிந்தனைகள் சுயமரியாதை விஷயங்கள் பெருவாரியான மக்களின் சிந்தனையை தட்டி எழுப்பியது ....அவன் தன்னுடைய நாளைய சமூகம் பயன்பெற மக்களை படிக்க பள்ளிக்கு அனுப்பினான் ........ஆனால் வேலை ....காலம் காலமாக படித்த ஒரு சிறிய சமூகம் இப்போது படிக்க ஆரம்பித்திருக்கும் பெரு வாரியான சமூகம் ....இங்கே merit தராசு வைத்தால் அங்கு ஜெயிக்க போவது அந்த படித்த மேதாவி சமூகம் ....அங்கே தான் இட ஒதிக்கீடு என்ற சமூக அக்கறை கொண்ட அஸ்திரத்தை கையில் எடுத்தார் பெரியார் அவர் சார்ந்த திராவிட இயக்கம் ....ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளில் வெறும் மூன்று லட்சம் சிறிய சமூகம் பெருவாரியாக பயன் அடைவது சமூக நீதியா ? இல்லை தொண்ணுற்று ஏழு லட்சம் கொண்ட சமூகம் பெருவாரியாக பயன் படுவது சமூக நீதியா ? அந்த மூணு லட்சம் சமூகம் பயன் பெற்றால் அது மனுநீதி ! அந்த மனுநீதியை மண்ணுள் புதைத்து அதன் மேல் சமூக நீதி கோடியை நாட்டியவர்கள் பெரியார் , அண்ணா, கலைஞர் மற்றும் அவர்கள் கடைபிடித்த திராவிட கொள்கையும் தான் ....